20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி நிர்ணயத்திற்கான கால அவகாசம் பற்றி கூற முடியாது!– மஹிந்த தேசப்பிரிய
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20 திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் ...


தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20 திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகளை நிர்ணயிப்பதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதனை உறுதிபடக் கூற முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி நிர்ணயம் குறித்த அனைத்து காரணிகளும் எனக்கு அப்பாலான செயன்முறைகளாகும்.
20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தேர்தல் தொகுதி நிர்ணயங்களை, தொகுதி நிர்ணய ஆணைக்குழு மேற்கொள்ளும்.
நாடாளுமன்றமும் நீதிமன்றமும் இணைந்தே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தற்போது நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 நாட்களுக்கு குறையாமலும், 56 நாட்களுக்கு கூடாலும் நாடாளுமன்றம் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.