வருங்கால மாமனாருக்கு வரதட்சணை வழங்கிய யோசித்த!
பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் மகளை திருமணம் முடிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டாவது புதல்வன் கடற்படை வீரர் யோசித்த ...


யோசித்த தனது மாமனார் லொஹானுக்கு வரதட்சணையாக கொடுத்தது அவரிடம் இருந்த ‘CSN’ ஊடக வலயமைப்பையே ஆகும்.
விளையாட்டு துறை தொலைக்காட்சியாக இயங்கிய குறித்த ஊடகம் புதிய அரசாங்கம் விதித்த விளையாட்டுத்துறை தொலைக்காட்சிக்கான வரிப்பணத்தை செலுத்த முடியாது ஊழியர்கள் வயிற்றில் அடித்து மூடப்பட இருந்த நிலையில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலையீட்டில் மீண்டும் வழமையான தொலைக்காட்சி, வானொலியாக செயற்பட வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
அதன்பின் குறித்த தொலைக்காட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் யோசித்த, லொஹானுக்குச் சொந்தமான ‘Entrust’ நிறுவனத்திற்கு கையளித்துள்ளார்.
‘Entrust’ நிறுவன பணிப்பாளர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக்க ரத்வத்த ஆவார்.
நிறுவனத்தின் அதிக பங்குகள் யோசித்தவின் வருங்கால மாமனார் லொஹானுக்கு சொந்தம்.
யோசித்த தனது நிறுவன பங்குகளை எவ்வளவு விலைக்கு லொஹானுக்கு வழங்கினார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
எனினும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் அதிக பங்குகள் தனக்கு சொந்தமாகும் என்ற எதிர்பார்ப்பில் யோசித்த இலவசமாக நிறுவன பங்குகளை லொஹானுக்கு வழங்கியுள்ளதாக வியாபாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.