சாட்சிகளை மறைமுகமாக எச்சரிக்கும் துமிந்த சில்வா! ஹிருனிக்கா குற்றச்சாட்டு
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்களுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமந்த சில்வா, ஊடகம் ஒன்றுக்கு கூற...


தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்களுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் துமந்த சில்வா, ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
இது, தமக்கு எதிராக எவரும் சாட்சியம் கூற முன்வரப் போவதில்லை என்பதை கோடிட்டு காட்டுகிறது. இது சாட்சிகளை மறைமுகமாக பயமுறுத்தும் செயற்பாடாகும் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை தொடரும் நிலையில் அவரின் கூற்று சாட்சிகளை பயமுறுத்தும் செயற்பாடாகும் என்று ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால், பலரும் அவருக்கு எதிராக சாட்சியம் கூறப் பயப்படுகின்றனர். எனினும் எதிர்வரும் பொதுத்தேர்தல் இந்த நிலைமையை மாற்றிவிடும் என்று ஹிருனிக்கா எதிர்வு கூறியுள்ளார்.
இதன்போது துமிந்த சில்வாவுக்கு எதிராக மக்கள் பயமின்றி சாட்சியம் கூற முன்வருவர் என்றும் ஹிருனிக்கா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.