மஹிந்த – மைத்திரி இணைந்து கொள்வார்கள் என்பது உறுதி!– ஜோன் செனவிரட்ன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து கொள்வார்கள் என்பது உறுதி என இரத்தினபுரி மாவட்ட நாட...

இருவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் குழு ஒன்றையும் நிறைவேற்றுக் குழுவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்துள்ளார்.
இரு தரப்பும் இணையாது என வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து என்னால் உறுதியாக கூற முடியாது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் சுபமான ஓர் நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற ஜனரஞ்சகமான பழைய கட்சியொன்று உடைந்து பிளவடைவதனை நான் மட்டுமன்றி சுதந்திரக் கட்சியின் பலர் விரும்பவில்லை என ஜோன் செனவிரட்ன கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு தேசியப்பட்டியல், நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பு மனு அல்லது பிரதமர் வேட்பு மனு எதுவுமே வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபட கூறியுள்ளதாக அமைச்சர் ராஜிதசேனாரட்ன நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.