ஐ.தே.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் அமைதி: மகிந்தானந்த அரசாங்கத்திடம் கேள்வி
முன்னைய அரசாங்க பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதல், 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்கொண்ட இலஞ்ச ஊழலிற்கு...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_743.html

முன்னைய அரசாங்க பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதல், 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்கொண்ட இலஞ்ச ஊழலிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.
ஆனால் சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்த அரசாங்கம், எவ்வித நடவடிக்கையும் இதுவரையும் மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் மீது தன்னிச்சையான முறையில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate