பாராளுமன்றை கலையுங்கள்: மஹிந்த ஆதரவாளர்கள் கோஷம்
பாராளுமன்றத்தை கலைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் எதிர்வ...


அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்து பாராளுமன்றத்தை கலைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக மகிந்த ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் அமைப்பு என புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.
இவ் அமைப்பில் பொது மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.
பாராளுமன்றத்தை எதிர்வரும் 23ம் திகதி கலைக்காவிட்டால் வீதியில் இறங்கி நடத்தப்படும் போராட்டங்களில் பாரியளவிலான மக்களும் பங்குகொள்ளுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்