பொதுத் தேர்தலை 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நடத்துக!– சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
பொதுத் தேர்தலை 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிய...

http://kandyskynews.blogspot.com/2015/06/20_64.html
பொதுத் தேர்தலை 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அந்த முறையின் கீழே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென யோசனை முன்வைத்துள்ளனர்.
விருப்புத் தெரிவு முறைமை ரத்து செய்யப்பட்டு தொகுதி வாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
எவ்வாறெனினும், எவ்வாறு தேர்தல் நடாத்துவது என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் தீர்மானிக்கவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள விருப்பத் தெரிவு முறையில் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.