நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு எதிராக மீண்டும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது! - விக்கிரமபாகு விசனம்.
நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் க...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடி பணிந்துள்ளார். இதனால் நாட்டின் புத்திஜீவிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் நடத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என்ற காரணத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் பிரதமர் மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என கோரி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்