நிதிக் குற்றவியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீடு
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய...


கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனினால் நிதி; குற்றவியல் விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டது.
இந்த பிரிவு மற்றும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட கைதுகளை ரத்து செய்யுமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த பொலிஸ் பிரிவின் நடவடிக்கைளை இடைநிறுத்துமாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மக்கள் நலனை கருத்திற்கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுவை தாக்கல் செய்துள்ள எல்லே குணவன்ச மற்றும் காலோ பொன்சேகா ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வறிய மக்களுக்காக தாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபருக்கு தனியான ஓர் பிரிவை உருவாக்க அதிகாரமில்லை.
பிரதமர் தலைமையிலான துணைக்குழுவொன்றின் பரிந்துரைகளுக்கு அமைய விசாரணை நடத்தப்படுகின்றது.
எனவே சட்டவிரோதமாக நிறுவப்பட்ட நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டுமென மனுதாரர்கள் கோரியுள்ளனர்.