மைத்திரிக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பதில் வழங்கப்படும்: மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 பதில் கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினர், அந்த உரைக்கு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பதில் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்முறை தேர்தலில் தோல்வியடைவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கூறியிருந்தார்.