மைத்திரியை மிகவும் மதிக்கின்றேன்: ஹக்கீம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில் அனைத்தும் நிறைவேற்றபடவில்லை என்றாலும் முடிந்த அளவு நிறைவேற்றியமையினால் அவருக்கு தான் மத...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில் அனைத்தும் நிறைவேற்றபடவில்லை என்றாலும் முடிந்த அளவு நிறைவேற்றியமையினால் அவருக்கு தான் மதிப்பளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை முழுமையாக நீக்குவதாக கூறியதற்கு தற்போது சிறிய அளவிலான அதிகாரம் மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவலாள அதிகாரத்தையாவது குறைத்தமையினால் அவருக்கு மதிப்பளிக்கின்றேன். எனினும் ஒழுங்கான முறையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ் முன்னணி உருவாகியிருப்பதற்கான காரணம் கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவதற்கே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.