மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை?: இறப்பதற்கு சில மணி நேரம் முன் குற்றவாளி திருமணம்
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_646.html
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் ( ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இன்று மதியம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இது பற்றி கடந்த சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு 72 மணித்தியாளங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
அந்த வகையில் இன்று மதியம் 2 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசிய அதிபர் இவர்களுக்கு இறுதி நேரத்தில் கருணை காட்டாத பட்சத்தில் இவர்களுக்கான தீர்ப்பு நிறைவேற்றப்படும் என கூறப்படுகின்றது.
இவர்களுக்கு தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இவர்களை குடும்பத்தினர் சென்று பார்வையிட்டுள்ளனர். மயூரனின் சகோதரி அவரைப் பார்த்த போது மயங்கி விழுந்துள்ளார். அன்ரூ சானின் தாயார் கண்ணீர் மல்க நின்றிருந்தார்.
இதேவேளை அன்ரூ சான் மரண தண்டனைக்கு முன் தனது காதலியை சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
உலகம் முழுவது இவர்களது மரண தண்டனை ஒத்திவைக்கப்படாதா என ஆவலோடு காத்திருக்கும் தருணத்தில் இறுதி நேரத்தில் ஏதும் அற்புதங்கள் நிகழாதா என இவர்களது குடும்பத்தினர் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.