43 வருடங்களின் பின்னர் சிறிலங்கா செல்லும் அமெரிக்க ராஜங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிறிலங்கா செல்லவுள்ளார். சிறிலங்காவுக்காவுக்கான கெரியி...
http://kandyskynews.blogspot.com/2015/04/43.html
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிறிலங்கா செல்லவுள்ளார்.
சிறிலங்காவுக்காவுக்கான கெரியின் பயணம் வெறும் 24 மணத்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி கொழும்பு செல்லும் ஜோன் கெரி, பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
43 வருடங்களின் பின்னர் அமெரிக்க ராஜங்க செயலாளர் ஒருவர் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதற்சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு மனன்ர் 1972ம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பியேர்ஸ் ரோஜர் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்கா செல்லும் அமெரிக்க ராஜங்க செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
மற்றும் சில பொது நிகழ்வுகளிலும் பங்கேற்கும் கெரி, கொழும்பில் அமெரிக்க தூதரகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன், ஜேன் கெரி சந்திப்புக்களை மேற்கொள்வார் என கூறப்பட்ட போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
|