யாழ் குடாவை அச்சுறுத்தும் போலி நாணயத்தாள்கள் - அவதானம்
யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரையும் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_198.html
![]() |
யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுவருடத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எனவே அதனை சாதகமாக பயன்படுத்தி போலி நாணயத்தாள்களும் விசமிகளால் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.
தற்போது யாழ் குடாநாட்டில் 5000 , 1000 , 500 ஆகிய தாள்களே போலியாக வெளியிடப்பட்டுள்ளன.
எனவே வியாபார நிலையங்களில் உள்ளவர்களும், பொதுமக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கவனயீனமாக இருந்தால் சட்ட நடவடிக்கைகளுக்குக் கூட ஆளாகலாம் என வணிகர் கழகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
|



Sri Lanka Rupee Exchange Rate