அண்ணனை வேதனைப்படுத்திய தம்பி மஹிந்த!
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தான் பல சந்தர்ப்பங்களில் மன வேதனை அடைந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல சந்தாப்பங்களி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_402.html
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தான் பல சந்தர்ப்பங்களில் மன வேதனை அடைந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல சந்தாப்பங்களில் தனிப்பட்ட ரீதியில் தமது மனதிற்கு வேதனை ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணையச் செய்யும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரையும் இணைத்துக்கொண்டு கட்சியை முன்னோக்கி நகர்த்த மைத்திரி முயற்சிக்க வேண்டும்.
1977ம் ஆண்டிலும், 2001ம் ஆண்டிலும் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகளே தோல்விக்கான காரணம் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே தாம் அண்மையில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை அழைத்ததாகவும், வேறு எந்த நோக்கங்களும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|