கொள்ளையர்களை களையெடுக்கும் முயற்சியில் சந்திரிக்கா!
மஹிந்த அரசாங்கத்தில் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_181.html
மஹிந்த அரசாங்கத்தில் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புயடைவர்கள் மீது தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விசாரணைகள் சட்ட ரீதியாக அமையவேண்டும் எனவும், இவ்வாறான விசாரணைகளுக்கு தமது எவ்வித எதிர்ப்பும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத அனைத்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.