வரத்தக வலயங்களை தொழில் வலயங்களாக மாற்றி சிறந்த வருமானத்தை பெற்றுத்தருவோம் – பிரதமர்
ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டமொன்று நிட்டம்புவ நகரில் நடைபெற்றது. நிட்டம்புவ பொது மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமச...


ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டமொன்று நிட்டம்புவ நகரில் நடைபெற்றது.
நிட்டம்புவ பொது மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பிரதமர் தெரிவித்த கருத்து..
கட்டுநாயக்க, பியகம், வதுபிடிவல ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டுசெல்ல எதிர்பார்க்கின்றோம். இந்த பகுதிகளில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணக்கம் தெரிவித்தார். தென்னந்தோட்டங்களை தற்போது நாம் நகரங்களாக மாற்றி வருகின்றோம். தொழில் வலயங்களாக மாற்றி சிறந்த வருமானங்களை பெற்றுத்தருவோம். சென்னையை விட பாரிய நகரமாக அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மாற்றுவோம்