அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக குறித்த சில பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட மாட்டாது
அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக துப்பாக்கிச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட ...


காலி துறைமுகத்தில் உள்ள மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதவான் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவன்காட் நிறுவனத்திற்கு எதிராக துப்பாக்கிச் சட்டம், வெடிபொருட்கள் சட்டம் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டாது என இதன்போது அந்த நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அறிவித்தனர்
சட்டத்தணிகளின் விளக்கம் உண்மையானதா என நீதவான் வினவியபோது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, காலி துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்திறக்கு சொந்தமான ஆயுதங்களை வேறொரு கப்பலுக்கு மாற்றவும் நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.
ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் மிகவும் பழமையானது என்பதால் அதில் எண்ணெய் கசிவு அல்லது வேறேதேனும் சேதம் ஏற்படலாம் என அவன்காட் நிறுவனம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
இதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆலோசனைகளை சட்டமாஅதிபரிடம் கோரியிருந்தனர்.
இதற்கமைய ஆயுதங்களை வேறு கப்பலுக்கு மாற்ற சட்டமாஅதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.