மனைவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மஹிந்த மறுத்துள்ளார்
முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். சிரி...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_107.html
சிரிலிய சவிய நிதி;யத்தில் இருந்து சிராந்திர நிதிக்கொள்ளையில் ஈடுபட்டதாகவும் வீடு ஒன்றை கொள்வனவு செய்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பிழையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிராந்தி ராஜபக்ச, கொழும்பு 5, டொரிங்டன் எவன்யூவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் தகவல் வழங்கியுள்ள அவர், சிராந்தியின் மருமகன் தில்சான் விக்கிரமசிங்க ஒரு வர்த்தகர், அவரே 35 லட்சம் ரூபா கடன் பெற்றுக் கொடுத்து வீட்டை கொள்வனவு செய்து கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தங்காலையில் அண்மையில் விபத்துக்குள்ளான வாகனம் தம்முடையது என்று என்று வெளியான தகவலையும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது, உலக உணவுத்திட்டத்தினால் சிரிலிய சவிய நிதியத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.