நாளை வித்தியா கொலை வழக்கில் மரண விசாரணை!- பல திருப்பங்கள் இடம்பெறலாமென தகவல்!
நாளை திங்கட்கிழமை காலை வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது. நாளைய தினம் நட...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_806.html
நாளை திங்கட்கிழமை காலை வித்தியா கொலை வழக்கு விசாரணையின் இரண்டாவது அமர்வு யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெறவிருக்கின்றது.
நாளைய தினம் நடைபெறும் அமர்வில் வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் நீதிமன்றில் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, நாளைய தினம் மரண விசாரணையும் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேநேரம் நாளை நடைபெறவுள்ள மரண விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாளைய அமர்வில் சிரேஸ்ட மனிதவுரிமைகள் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் தனது வாதத்திறமையினால் வழக்கு விசாரணையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களும் நாளை 2 வது தடவையாக நீதிமன்றில் ஆஐர் செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி குறித்த சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்ட நிலையில், குறித்த சந்தேகநபர்களுக்கு நாளை 15ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பை நீதிபதி வழங்கியிருந்த நிலையில் சந்தேகநபர்கள் நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை கடந்த நீதிமன்ற முற்படுத்தலின் போது சந்தேகநபர்களில் ஒருவர், தான் மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் கொழும்பில் இருந்ததாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சந்தேகநபர் தெரிவித்திருந்த குறித்த தனியார் வங்கியிடமிருந்து ATM இயந்திரத்தின் வீடியோ பதிவினை பெறுமாறு நீதிபதி பொலிஸாருக்கு பணித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சாட்சியமும் நாளை மன்றில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், சந்தேகநபர்களின் DNA அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.