போர்க்குற்றவாளிகளை அம்பலப்படுத்தும் மஹிந்த!
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_545.html
இதற்காக பல்வேறுபட்ட சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இவ்வாறன நிலையில் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்பி, மஹிந்தவுக்கு ஆதரவான அனுதாப அலையைத் தோற்றுவிக்கும் நோக்கில், போலியான ஐ.நா போர்க்குற்ற அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருங்கிய குழுவொன்று செயற்பட்டு வருவதாக புலனாய்வுத் துறையினர் அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த அறிக்கையினை வெளியிட இக்குழு தீர்மானித்துள்ளது.
அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் உயர் பதவி வகிக்கும் சுமார் 50 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களை போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்படவுள்ளது. இதன்மூலம் உண்மையான போர்க்குற்றவாளிகளின் பெயர்களும் அம்பலத்திற்கும் வரக்கூடும்.
தேர்தலின் போது மஹிந்தவுக்கு அனுதாப அலையை தோற்றுவிக்கவே இந்த போலி அறிக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்த போட்டியிடும் குருநாகல் மாவட்டத்திலேயே பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் குடியமர்த்தப்பட்டனர். மேற்படி போலி அறிக்கையை இவர்களுக்கு காட்டுவதன் மூலம் இனவாதத்தை தூண்டி அனுதாபம் மூலம் வாக்குகளை பெறுவதே இதன் நோக்கமாகவுள்ளது.
போர்க்குற்ற அறிக்கையின் படி இராணுவத்தினரை மின்சார நாற்காலிக்கு அனுப்பவுள்ளதாகவும், அவர்களைப் பாதுகாக்க மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறும் கோரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் வெளியிடவுள்ள போர்க்குற்ற அறிக்கையில், மஹிந்த தரப்பினருக்கு பெரும் ஆபத்து காத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.