இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்குள் மலேசியா
இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மலேசிய அரசாங்கம் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் அண்மையில் இ...


கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது இந்த ஆர்வத்தை மலேசியாவின் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் டட்டுக் அமர் டக்ளஸ் இலங்கையின் அமைச்சர் லச்மன் கிரியெல்லவிடம் வெளிப்படுத்தினார்.
இதன்படி எதிர்காலத்தில் மலேசியா இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே பெருந்தோட்டத்துறையில் மலேசியா இலங்கையுடன் ஒப்பிடும்போது அதீத வளர்ச்சியை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.