மஹிந்த தேர்தலில் போட்டியிட்டால் விசேட சலுகைகள் வழங்கப்படும்!- அனுர யாப்பா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் விசேட சலுகைகள் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அன...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டால், நேர்முகத் தேர்வு நடத்தப்படமாட்டாது.
வேட்பு மனு வழங்குவதற்கான விசேட குழு முன்னிலையில் பிரசன்னமாகாது மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கப்படும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து வேட்பாளர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவர், வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் விசேட குழுவின் முன்னிலையில், நேர்முகத் தேர்விற்காக பிரசன்னமாக வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட விரும்பினால் அதற்கு எவ்வித தடையும் கிடையாது என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது பற்றி கூறியுள்ளார் என அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.