சாதாரண பயணிகள் விமானத்தில் சீனா சென்றார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_438.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
யு.எல்.868 எனும் சாதாரண பயணிகள் விமானத்திலேயே ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட குழுவினர் சீனாவுக்கு பயணித்துள்ளனர்.
சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் விடுத்துள்ள அழைப்பின் பேரில் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியை வரவேற்க, அங்கு வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன தலைநகர் பீஜிங்கில் நாளை நடைபெறவுள்ள அரச நிகழ்வில் கலந்துகொள்ளும் இலங்கை ஜனாதிபதி, அதனையடுத்து சீன ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
மேலும் சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்.

Sri Lanka Rupee Exchange Rate