இலங்கைக்கு நாளை விஜயம் மேற்கொள்ளும் அப்துல் கலாம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை செல்லவுள்ளார். மின்வலு எரிசக்தி அமைச்சர...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_734.html

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை செல்லவுள்ளார்.
மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும் அப்துல் கலாம், எதிர்வரும் 27 ஆம் திகதி இந்திய திரும்பவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால தலைவர்கள் என்ற தலைப்பில் நாளை மறுதினம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாநாட்டின் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் அவர், ஆயிரத்து 500 மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.