கோத்தபாயவின் பிரஜாவுரிமை பறிபோகும்!
மிக் விமானம் கொடுக்கல் வாங்கல் குறித்து முறையாக விசாரணை நடத்தி சட்டத்தை செயற்படுத்தினால் கோத்தபாய ராஜபக்சவிற்கு பிரஜாவுரிமை பறிபோகும் அப...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_400.html
மிக் விமானக் கொள்வனவில் ஏற்பட்ட நிதி மோசடிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச யுத்தம் ஆரம்பித்ததே தரகு பணம் பெற்றுக் கொண்டு தான்.
தான் வெளியிடும் கருத்து பொய் என்றால் தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு சவால் விடுத்துள்ள மங்கள, 2006ம் ஆண்டு 4 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் யுத்த காலம் என்பதால் அது கணக்கிலெடுக்கப்படவில்லை என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு இணைப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் லண்டன் அலுவலகம் என்று ஒன்று இல்லை எனவும் பிரிடிஸ் வர்ஜூனியா என்ற நிறுவனம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் கும்பலுக்குச் சொந்தமானதெனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இந்த கொடுக்கல் வாங்கலுடன் யுக்ரேன் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு இருப்பதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
உதயங்கவின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுதாகவும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இவையாவும் பொய் என்று கோத்தபாய சொல்வாரானால் எனக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate