சிறுவர்களை தூக்கில் தொங்கவிட்டு உடலில் வாசகங்களை எழுதிய ஐ.எஸ் தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் உலக நாடுகள்
ஐ.எஸ் தீவிரவாதிகள் ரமலான் நோன்பு கடைபிடிக்காத இரு சிறுவர்களை, பொது இடத்தில் துாக்கில் தொங்கவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அப்பகுதிகளில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், தங்கள் கொள்கைக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள், இந்த மாதம்(யூன்) முழுவதும் நோன்பு கடைபிடிப்பது வழக்கம்.
இந்நிலையில், சிரியாவின் டேர் - இஜோர் நகரத்தை சேர்ந்த இரு சிறுவர்கள், ரம்ஜான் நோன்பு காலத்தில் பகல் பொழுதில் உணவு உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த, ஐ.எஸ் படையை சேர்ந்த காவலர்கள், அச்சிறுவர்களை பிடித்து, தங்கள் அமைப்பின் நீதி விசாரணைக்கு உட்படுத்தினர். நோன்பு காலத்தில் உணவு உட்கொண்ட இருவருக்கும் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும், மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பொது இடத்தில் துாக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர்.
அவர்களின் உடல், நீண்ட நேரம் அங்கேயே தொங்கவிடப்பட்டது. அவர்களின் உடலில், 'ரம்ஜான் நோன்பு விதிமுறைகளை மீறியதால், இவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது' என்ற வாசகங்களுடனான கடிதமும் தொங்கவிடப்பட்டது.
இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.