யாழ். குடாநாட்டு வாகனங்களை கடுமையாக கண்காணிக்க வேண்டும்: மதிவண்ணன்
யாழ். மாவட்டத்தில் வாகனங்கள் மீது கடுமையான முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட உதவி போக்குவரத்து ஆணையாளர...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_958.html

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
வடக்கில் இடம்பெறும் மோசமான விபத்துக்களைக் கட்டுப்படுத்த, முதற்கட்டமாக பொலிஸாருடன் இணைந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அழகு சாதனப் பொருள்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சாரதிகள் இவற்றின் மீதான கவனம் காரணமாக வீதிகளில் கவனம் செலுத்துவதில்லை. இதேபோல முச்சக்கர வண்டிகளில் தேவைக்கு அதிகமான அலங்காரங்கள், கண்ணாடிகள் பொருத்தப்பட்டு பின்னால் ஒலி பெருக்கி சாதனங்கள் பொருத்தப்பட்டு காணப்படுகின்றன. இவையும் கவனக்குறைவையே ஏற்படுத்தும்.
இத்தகைய தேவையற்ற பொருள்கள் அகற்றப்படும். இல்லையென்றால் பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும். இதேபோல வீதியில் ஒடும் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதற்கு தகுதி உடையதா என பரிசோதனை செய்யபடும்.
அத்துடன், யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் கருத்தரங்குகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழகைளிலும் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட போக்குவரத்து திணைக்கள சாரதி அனுமதிப்பத்திர பரிசோதக அதிகாரி, சி.எல்.லக்மல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.