நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது ஜனாதிபதிக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்: மங்கள
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_591.html

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது பற்றி திட்டவட்டமாக எதனையும் அறிவிக்க முடியாது.
நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படுமா அல்லது இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் கலைக்கப்படுமா என்பது யாருக்கும் தெரியாது. அது பற்றித் தெரிந்தவர்கள் ஜனாதிபதியும் கடவுளும் மட்டுமேயாகும்.
எவ்வாறெனினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.