பசிலின் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை ம...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_960.html

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், பிரியசாத் டெப் மற்றும் ரோகினி மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழு இந்த அனுமதியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதிகள் மனுவை மேலும் விசாரணை செய்ய அனுமதி அளித்துள்ளனர்.
மனு தொடர்பில் ஏதேனும் எதிர்ப்பு இருப்பின் இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மனு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.