சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு விலகுகின்றனர்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு இன்று விலகுகின்றனர். சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து தற்போதைய அர...

சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள், பதவிகளை துறக்கவுள்ளனர்.
கட்சியின் கடும் எதிர்ப்பையும் மீறி கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்த இதுவரையில் வேட்பு மனுக்கள் கோரப்படவில்லை என குறித்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பத்து பேர் இவ்வாறு இன்று பதவியை துறக்கவுள்ளனர்.
இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் இவர்கள் நடத்தவுள்ளனர்.
டிலான் பெரேரா, பவித்ரா வன்னியாரச்சி, சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே, மஹிந்த யாப்பா உள்ளிட்டவர்கள் இவ்வாறு பதவி விலகவுள்ளனர்.