20வது அரசியல் திருத்தத்துக்கு சாவுமணி அடிக்கபட்டு விட்டது. இந்த பெருமை ரவுப் ஹக்கீமையே சாரும்.
(அஷரப் ஏ சமத்) இந்த நாட்டின் வாழும் சிறுபாண்மைச் சமுகத்தின் பாராளுமன்ற பிரநிதித்துவத்தை இரவோடு இரவாக கருவருத்து அதனை இல்லாமால் செய்வதற...


(அஷரப் ஏ சமத்)
இந்த நாட்டின் வாழும் சிறுபாண்மைச் சமுகத்தின் பாராளுமன்ற பிரநிதித்துவத்தை இரவோடு இரவாக கருவருத்து அதனை இல்லாமால் செய்வதற்கு பொளத்த தலைவர்கள் மற்றும் அரச தலைவர்கள், இனரீதியாகவும் சிந்தித்தனர்.
அதன் விளைவாகவே 20வது தேர்தல் திருத்தத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களின் குரலை நசுக்க கங்கனம் கட்டினார்கள்.
பாராளுமன்றத்தைத் தீர்;மாணிக்கும் சக்தியாக சிறுபான்மையினரே சிறுகட்சிகளோ ஒருபோதும் இருக்கக் கூடாது. என்றே சிந்தித்தனர்..
அந்த உக்தியை தனியே நின்று தடுத்து நிறுத்திய பெருமை முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீமே சாரும்.
இந்த வராலாற்று வெற்றியை இந்த நாட்டின் வாழும் சிறுபான்மைச் சமுகமும் 21 சிறுபான்மை அரசியல் கட்சிகளும் ஒருபோதும் மறக்க முடியாது.
இன்று கொழும்பில் உள்ள வருமைக்கோட்டின் கீழ் வாழ் 50 குடும்பங்களுக்கு தமது வீடுகளுக்கு கூரை போட்டுக்கொள்வதற்காக சீட்களை வழங்கி வைக்கும்போதே மேற்கண்டவாறு மாகான சபை உறுப்பினர் அர்சத் nizamdeen தெரிவித்தார்.
இந்த வேளைத்திட்டத்தினை கட்சிதமாக செய்து முடிக்க சில பௌத்த குருக்கள், சிகல உருமைய கட்சியினர் சிரேஸ்ட அரசியல் உறுப்பிணர்கள் பலர் பாரிய பிரயத்தனம் மேற்கொண்டனர். பல சிவில் சமுகங்கள், கலைஞர்கள், ஊடகங்களெல்லாம் இணைந்து பிரயத்தனம் மேற்கொண்டனர்.
இந்த நல்லாட்சியில் மிக இலகுவாக பாராளுமன்றத்தில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து 3-2 பலம் இருந்தும் அதனை அமைச்சர் ஹக்கீம் தமது இறுதி உச்சகட்ட பிரயத்தனத்தை அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் 21கட்சிகளையும் அழைத்து அவர்களை ஒருமித்து இந்த தேர்தல் சீர்திருத்தத்திற்கு இரட்டை வாக்கு முறைமையை அறிமுகப்படுத்தினார்.
நேற்று இரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனால் இந்த 20வது அரசியலமைப்புக்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. இனிஒருபோதும் எந்த ஒரு கட்சியும் எதிர்காலத்தில் 3-2 பெரும்பான்மையைப் பெற்று இதனை அனுமதிக்க வாய்ப்பு இருக்காது.
இதற்காக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தவைர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தமது முழு சகத்தியையும் பிரயத்தனையும் பாரளுமன்றம், அமைச்சரவை, ஜ.தே.கட்சி தலைமை, ஜனாதிபதி, மற்றும் 21 சிறுகட்சிகளையெல்லாம் அழைத்து அவர்களையும் ஒன்ற திரட்டி அளுத்தம் கொடுத்ததை நாம் ஊடகங்கள் ஊடகாகவும் அவதானித்தோம்.
இந்த வரலாற்று சாதனையை இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பொன் எழுத்துக்கலாள் பொறிக்கப்படல் வேண்டும். முஸ்லீம் காங்கிரஸ் வெறுமனமே முஸ்லீம்களது அபிவிருத்தி மற்றும் பிரதேச சபைகள் மட்டும் பெறு என மேல் மாகாண சபையின் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பிணர் அர்சத் தெரிவித்தார்.
அன்று மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவிடம் வாக்கு வெட்டுப்புள்ளியை 12 இல் இருந்து 4.ஆக குறைந்தன் காரணமாக இன்று சிறுபான்மைக் கட்சிகள் நன்மையடைந்து வருகின்றன.
ஆதே போன்றதொரு தொனியில் தான் எமது தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் இந்த நல்லாட்சியில் 3 -2 பெரும்பாண்மை அவசர அவசரமாக 20வது அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் அனுமதி பெற இருந்தும். அதற்கு பகிரங்கமாக வாதிட்டார்.