முஸ்லிம் வாக்குகளை இழந்ததையிட்டு கவலையடைகின்றேன்: மஹிந்த
கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்தையிட்டு கவலையடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_100.html

"குறித்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கமாட்டாது என்பதனை நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். இந்த நிலையில் கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் வாக்குளினை இழந்ததினையிட்டு கவலையடைகின்றேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபலசேனா போன்ற அமைப்புக்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையினால் முஸ்லிம் மக்கள் மீது தனக்கு எதிராக ஒரு உணர்வு தோன்றியது. இதனை அடையாளம் கண்ட எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அதிக நன்மையடைந்தனர்" எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
"இது தொடர்பில் ஆரம்பத்திலேயே எனது தலைமையிலான அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. அச்சமயத்தில் குறித்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன் இதுவொரு காலம் கடந்த நடவடிக்கை எனவும் சம்பிக்க தெரிவித்தார். இந்த சதியில் சம்பிக்கவும் ஒரு பங்காளர் என்பதை நான் உணர்;;ந்த போது, குறித்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுப்பது காலம் கடந்த செயற்பாடாக இருந்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய சிலேன் டுடே பத்திரிகையில் கட்டுரையொன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate