மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி
மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி முன்னாள் அமெரிக்க தூதரும் உயிரிழந்துள்ளார். மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மகளின் திருமண வரவேற்பு ...


மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி முன்னாள் அமெரிக்க தூதரும் உயிரிழந்துள்ளார்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மகளின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை கோலாலம்பூருக்கு திரும்ப அழைத்து வர ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பிரதமரின் மூத்த உதவியாளர் அஸ்லின் அலியாஸ், முன்னாள் அமெரிக்க தூதர் ஜமாலுதின் ஜார்ஜிஸ் உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் கோலாலம்பூர் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கோலாலம்பூரின் புறநகர் பகுதியான சிமனி பகுதியில் ஹெலிகாப்டர் வந்த போது திடீரென நடுவானில் நொறுங்கி கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவலை பிரதமர் நஜிப் ரசாக் உறுதி செய்தார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் அவர் கண்ணீர் மல்க கூறும் போது, ‘மலேசிய அரசுக்கும், ஆளும் கட்சி மற்றும் நாட்டுக்கும் மிகப்பெரும் பங்காற்றிய 2 தலைவர்களை நாம் இழந்து விட்டோம். மலேசியா–அமெரிக்க உறவுகளை பலப்படுத்தியதில் ஜமாலுதீன் மிகப்பெரும் பங்காற்றினார். அவரது மரணம் எனக்கு மிகப்பெரும் இழப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்தார்.