கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றம்
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கால அட்டவணை மாற்றப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ...


திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள ஆகஸ்ட் 17ஆம் திகதியை அண்மித்த காலப்பகுதியில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு காலஅட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஸ்பகுமார குறிப்பிட்டார்.
கால அட்டவணை மாற்றம் குறித்து விரைவில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.