மெக்சிகோவில் புகலிடக் கோரிக்கையாளர்களின் கார் ஆற்றினுள் வீழ்ந்ததில் 9 பேர் பலி
மெக்சிகோ, டபஸ்கோ மாநிலத்தின் ஜலாபா மாநகர சபை பகுதியில் உள்ள பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் வீழ்ந...


மெக்சிகோ, டபஸ்கோ மாநிலத்தின் ஜலாபா மாநகர சபை பகுதியில் உள்ள பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் வீழ்ந்ததில் 9 சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (26) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல்கள் கிடைத்ததும் 7 பிரிவுகளாகத் தாம் மீட்புப் பணிகளை முன்னெடுத்ததாக சிவில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான உதவி பணிப்பாளர் ஜோர்க் மெண்டஸ் தெரிவித்துள்ளார்.
தேடுதலின் போது, விபத்திற்குள்ளான காரின் அடிப்பாகத்திலிருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணங்களற்ற 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த காரில் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிவேகம் காரணமாக கார் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த பலர், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சட்டவிரோதமாக ஐக்கிய அமெரிக்கா நோக்கிய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.