ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்த...


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமையவே, இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையின் பின்னர் மனித உரிமைகள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் நல்லாட்சியை முன்னெடுக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா, மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படும் என்று தூதரகத்தின் பேச்சாளர் ஜேசுஆ ஷேன் தெரிவித்துள்ளார்.