பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா?
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ...


பிரித்தானியாவில் உள்ள இந்திய, சீன உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் கழுவுமிடங்களில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர்.
விசா காலம் முடிந்த பின்னரும், அங்கேயே சட்ட விரோதமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், பிரித்தானிய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நடத்தும் உணவகங்களில், அந்நாட்டு குடியேற்ற (இமிகிரேஷன்) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தினமும் சராசரியாக, 40 வெளிநாட்டினர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து, தலா 18.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.