இந்திய இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் டல்பீர் சிங் நாளை ஐவர் கொண்ட குழுவினருடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_291.html

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் காண்படுகின்ற நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும்,
இராணுவ தளபதி ஜெனரால் கிருஷாந்த டி சில்வாவின் அழைப்பிற்கமையவுமே அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கைக்கான இந்திய தூதுவர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகள், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளை சந்திக்கவுள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாட்டின் பாதுகாப்பு மத்திய நிலையங்கள், கண்டி, காலி, மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.