வாகன விபத்தில் குழந்தை பலி
(க.கிஷாந்தன்) பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் 13 கட்டை பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸா...


பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் 13 கட்டை பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 3 வயதுடைய ஆண் குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.
பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.