"பூமி 2.0' கோள் கண்டுபிடிப்பு
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே எமது பூமியை பெரிதும் ஒத்த கெப்லர்–452 பி என்ற புதிய கோளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்ட...


நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது 'பூமி 2.0' என அழைக்கப்படும் இந்தக் கோள் தொடர்பில் வியாழக்கிழமை அறிவிப்புச் செய்துள்ளது.
விண்வெளி தொலைநோக்கியான கெப்லர் மூலம் இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோளானது தனது மேற்பரப்பில் திரவ வடிவில் நீரைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கெப்லர் தொலைநோக்கி 2009 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட பின்னர் எமது சூரிய மண்டலத்துக்கு வெளியிலான 1,028 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 150 மில்லியன் தொலை விலுள்ள நட்சத்திரத்தைச் சுற்றியே இந்தக் கோள் வலம் வருகின்றது.