பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்!- பொதுபல சேனா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொர...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_20.html

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியுடனும் இணைந்த போட்டியிடாது தனித்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவை சில தரப்பினர் சிங்கள பௌத்த பேரினவாத மற்றும் அடிப்படைவாத கட்சியாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனினும், தமிழ் முஸ்லிம் எந்தவொரு தரப்பினருக்கும் எமது கட்சியின் கதவுகள் திறந்துள்ளது.
கட்சிக் கொள்கைகளுக்கு இணங்கினால் தேர்தலில் போட்டியிடவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
தற்போதைய அரசாங்கம் நாட்டை பாரிய குழியில் தள்ளிக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் நாடு ஆட்சி செய்யப்படுகின்றது என ஞானசார தேரர் சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.