ஊழல் மோசடி மற்றும் குடும்ப அரசியலை வளர்க்க மஹிந்த முயற்சியா?: ரணில் கேள்வி
ஊழல் மோசடிகள் மற்றும் குடும்ப அரசியலை மீளவும் வளர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றாரா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_79.html

இது தொடர்பில் மஹிந்த தனது நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தனது முகப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஓர் சுவரொட்டியில் “நான் தயார்” என குறிப்பிட்டுள்ளது. எதற்கு தயார் மீண்டும் ஊழல் மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சியை நடாத்துவதற்கு தயாராகின்றாரா?
குடும்ப ஆட்சிக்கா? ஊழல் மோசடிகளுக்காக நாட்டில் பீதியை மீளவும் ஏற்படுத்தவா தயாராகின்றார் என தெளிவுபடுத்த வேண்டும்.
அவ்வாறு சொன்னால் அதற்கு ஏற்ற வகையில் நாம் செயற்பட முடியும்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் களமிறங்குகின்றது.
ஜனவரி மாதம் 8ம் திகதி செய்த புரட்சியை மீள் உறுதி செய்யும் வகையில் இந்த பொதுத் தேர்தல் அமையும் என ரணில் விக்ரமசிங்க தனது முகப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.