ரணிலை 48 மணிநேரத்தில் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும்: தினேஷ் குணவர்தன
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை 48 மணிநேரத்தில் வீட்டுக்கு அனுப்ப முடியும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் க...
http://kandyskynews.blogspot.com/2015/06/48.html
அம்பாறை புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால், நிலைக்க முடியாது. அது சிறுபான்மை அரசாங்கம்.
முற்போக்கான சக்திகளுடன் கூடிய 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதனால், ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடன் அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் குணவர்தன தனது மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊடாக தனித்து பல வருடங்களாக தேர்தலில் போட்டியிட போதிலும் அவரால் ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்ததன் காரணமாகவே அவரால், நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சர் பதவியையும் வகிக்க முடிந்தது.
மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான தினேஷ் குணவர்தன கடும் போக்கு சிங்கள தேசியவாதியாவார். எதிர்வரும் தேர்தலில் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
இதனால், தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச தோளில் ஏறி நாடாளுமன்றத்திற்கு வர தினேஷ் குணவர்தன முயற்சித்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.