ராஜித சேனாரட்னவின் முட்டாள்தனமான செயற்பாடு காரணமாக சிக்கலில் மாட்டிக் கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண மோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ! அம்பலப்படுத்தினார் மஹிந்த கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரட்னவின் முட்டாள்தனமான செயற்பாடு க...

கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட ராஜித சேனாரட்னவின் முட்டாள்தனமான செயற்பாடு காரணமாக சிக்கலில் மாட்டிக் கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சியின் போது, கடற்றொழில் அமைச்சராக ராஜித சேனாரட்ன செயற்பட்டார். அவரின் முட்டாள்தனமான செயற்பாடு காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ராஜிதவின் செயற்பாடு காரணமாகவே சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.
சிறிலங்காவின் தேசிய கொடிகளை சீன டோலார் படகுகள் சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டது. இதற்கு ராஜிதவே அனுமதி வழங்கியிருந்தார். சீனர்களுடன் இணைந்து பில்லியன் கணக்கான பணத்தை அவர் உழைத்துள்ளார்.
சீனாவுடன் எமக்கு இருக்கும் நெருக்கம் காரணமாக அவற்றை பிரச்சினையாக்க முடியாது.
பொதுபல சேனவை பயன்படுத்தி நாம் ராஜிதவை விமர்சித்த போது, என்னிடம் வந்த அவர், ஞானசார தேரரிடம் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு என்னை கும்பிட்டு கேட்டார்.
பின்னர், நான் கோத்தபாய கொண்டு பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுத்தேன். ராஜிதவை சிக்கவைக்க முயற்சித்தோம். அதற்கு பசில் இடமளிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள்.
ராஜிதவே இறுதியில் பசிலை அமெரிக்காவுக்கு அனுப்பியனர். பசில் ராஜிதவை காப்பாற்றினார், இறுதியில் ராஜித பசிலை காப்பாற்றினார் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நிலையில், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா தப்பியோடியுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணை நடத்த பசில் ராஜபக்ஷவை சிறிலங்கா கொண்டு வர சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.