மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளரினால் தடை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் ...


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் குறித்த நிகழ்ச்சியினை சக்தி டி.வியில் ஒளிபரப்ப முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை ராஜகரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் இடம்பெற்றது. பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசியல் கட்சியொன்றினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் எவ்வாறு மின்னல் அரசியல் நிகழ்ச்சியினை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறிக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா, "முல்லைத்தீவு மாவட்ட உள்@ராட்சி மன்ற தேர்தலிலிருந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் மாத்திரம் தன்னால் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக" குறிப்பிட்ட அவர், இது நியாயமற்றது என்றார்.

எவ்வாறாயினும், குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதனை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார். எனினும், "சில மின்னல் நிகழச்சிகள் ஏற்கனவே பதிவுசெய்துள்ளதாகவும் அவற்றினை மாத்திரம் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு" முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கோரிக்கை விடுத்தார்.

முன்கூட்டி பதிவுசெய்யப்பட்டுள்ள மின்னல் நிகழ்ச்சிகளை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.முஹம்மட் பார்வையிட்டு அனுமதி வழங்கினால் மாத்திரமே ஒளிபரப்ப முடியும் என தேர்தல் ஆணையாளர் இதற்கு பதலளித்துள்ளார்.

அத்துடன் இன்றிலிருந்து புதிதாக எந்தவொரு மின்னல் நிகழ்ச்சியினையும் புதிதாக பதிவுசெய்ய முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

43 வருடங்களின் பின்னர் சிறிலங்கா செல்லும் அமெரிக்க ராஜங்க செயலாளர்

 அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிறிலங்கா செல்லவுள்ளார். சிறிலங்காவுக்காவுக்கான கெரியின் பயணம் வெறும் 24 மணத்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்...

யாழ் குடாவை அச்சுறுத்தும் போலி நாணயத்தாள்கள் - அவதானம்

 யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு யாழ்.வணிகர் கழக...

அண்ணனை வேதனைப்படுத்திய தம்பி மஹிந்த!

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தான் பல சந்தர்ப்பங்களில் மன வேதனை அடைந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல சந்தாப்பங்களில் தனிப்பட்ட ரீதியில் தமது மனதிற்கு வேதனை ஏற்படுத்தும் சம்பவங...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item