நீதிமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்ட வெலே சுதா மீதான குற்றப்பத்திரிகை
பாரிய அளவிலான ஹெரோயின் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமந்த குமார எனப்படும் வெலே சுதா தொடர்...


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரை குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, 2010 கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெலே சுதா மீதான மற்றுமொரு வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான ஆவணம் காணாமல் போயுள்ளமை குறித்து கல்கிஸ்ஸ வலய பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா என நீதிமன்றம் எதிர்வரும் யூலை 16ம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணியிடம் கோரப்பட்டுள்ளது.