12000 விலைமாதுக்களுடன் உல்லாச வாழ்க்கை: 13 வயது சிறுமியால் மாட்டிய ஆசிரியர்
ப்பானில் விலைமாதுக்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந...

http://kandyskynews.blogspot.com/2015/04/12000-13.html

ஜப்பானில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யுஹே டகாஷிமா (Yuhei Takashima Age - 64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஜப்பானியப் பள்ளிக்கு இவரை இடமாற்றம் செய்து அனுப்பியது.
அங்கு பல ஆண்டுகாலம் பணியாற்றிய இவர், அன்றாடம் பல விலைமாதுக்களுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மணிலாவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பி சென்ற அவர், ஆண்டுக்கு ஒருமுறை மணிலாவிற்கு சுற்றுலாசென்று அங்கு விலைமாதுக்களுடன் உறவு கொண்டுள்ளார்.
இப்படி கடந்த 27 ஆண்டுகளில் 65 முறை உல்லாச சுற்றுலா சென்றுள்ளார். 14 முதல் 70 வயதுக்குள் பலதரப்பட்ட சுமார் 12 ஆயிரம் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்த சுமார் 15 ஆயிரம் புகைப்படங்களின் கோர்வையை 400 தனி ஆல்பங்களாக பாதுகாத்து வைத்துள்ளார்.
கடைசியாக ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவரது இந்த செயல்கள், இவர் பாதுகாத்து வந்த ஆல்பம் மூலமாக அம்பலமாகியது.
ஆல்பத்தில் காணப்பட்ட ஒரு சிறுமிக்கு 13-14 வயது மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய பொலிசார் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஜப்பானிய சட்டங்களின்படி வெளிநாட்டில் குற்றம் செய்திருந்தாலும் அதுபற்றி தெரியவந்தால் கைது செய்து தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிசாருக்கு உண்டு.
எனவே, இவரால் கற்பழிக்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் சிறுமியாக இருந்தபோதிலும் குற்றவாளியான யுஹே டகாஷிமா ஜப்பானியர் என்பதால் அவரை பொலிசார் கைது செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.