20வது திருத்தச்சட்டம் குறித்து இணக்கம் இல்லை: விஜேதாச ராஜபக்ஸ
20வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவது குறித்து இதுவரை எவ்வித இணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ர...


சிங்கள ஊடகம் ஒன்றிடம் இந்த தகவலை வெளியிட்டார்.
இது குறித்து கட்சித் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் பலவற்றையும் நடத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இதுவரை எவ்வித இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாத நிலையினால், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 20 அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருடனும் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.