மஹிந்தவின் பிரதமர் கனவு தகர்க்கப்பட்டமையினால் அவசர சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பெயரிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பு தெரிவித்த...

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் முன்னாள் ஜனாதிபதி நிராகரிக்கப்பட்டமையை தொடர்ந்து அவரது அரசியல் குழு மனமுடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய தான் தேர்தலில் வேறு தரப்பில் போட்டியிடுவது தொடர்பில் இன்று இரவு மஹிந்த தர்ப்பினர் விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்காக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் மற்றும் சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிக்கு சுதந்திர கட்சியின் வேட்பு மனு வழங்குவது தொடர்பில் சில இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் பிரதமர் வேட்புரிமை வழங்கப்படாமையினால் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமைக்கமைய சுதந்திர கட்சி பிளவடையும் வகையிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதியினால் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.